போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.போப் ஆண்டவரின் உடல் அவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு நண்பகல் 12 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி தொடங்கியது. முதல் நாளில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் அன்பான போப் ஆண்டவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனால் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட முதல் 8 மணி நேரத்திலேயே 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் அமைதியுடனும், பணிவுடனும் காத்திருந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.போப் ஆண்டவர் உடலுக்கு ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரையே அஞ்சலி செலுத்த அனுமதியளிக்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் முதல் நாளிலேயே அதிகமானோர் அஞ்சலி செலுத்த திரண்டதால் இரவு முழுவதும் அஞ்சலி செலுத்த அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.6 முதல் 7 மணி வரை மட்டுமே பேராலயம் மூடல்தூய்மை பணிகளுக்காக நேற்று காலையில் 6 முதல் 7 மணி வரை மட்டுமே பேராலயம் மூடப்பட்டது. பின்னர் மீண்டும் அஞ்சலிக்காக தேவாலயத்தின் புனித கதவுகள் திறக்கப்பட்டன. ஏழைகள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பின்தங்கியவர்கள் என சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மீது மிகவும் கருணை காட்டிய போப் ஆண்டவரின் மரணம் உலகையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இது வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் எதிரொலிக்கிறது. அங்கு நிலவி வரும் மயான அமைதியே இந்த துயரத்தை வெளிப்படுத்தி வருகிறது. தங்கள் கைக்குழந்தை, வயதான பெற்றோர்களை அழைத்துக்கொண்டு நாடு விட்டு நாடு வந்து போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். எளிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தாலும் அந்த அலுப்பு அவர்களிடம் இல்லை. எப்படியாவது தங்களது அன்பான போப்பின் முகத்தை கடைசியாக பார்த்து விடும் முனைப்புடன் காத்திருக்கின்றனர்.இதைப்போல இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் என பல்வேறு நாடுகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாடிகனில் குவிந்து உள்ளனர்.நாளை இறுதிச்சடங்குபுனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடலுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதன்படி அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா, ஜனாதிபதி டிரம்புடம் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.வெளிநாட்டு பிரமுகர்களில் முக்கியமானவர்கள்உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்இளவரசர் வில்லியம்ஸ்பெயின் மன்னர் பிலிப் VI மற்றும் ராணி லெடிசியாஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன்பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாபோப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் ரோம் நகர் வாடிகனில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று. போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மூலக்கதை
