ஐ.பி.எல். 2025: சென்னை - ஐதராபாத் போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் அஜித்

சென்னை,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) தோல்வி கண்டது. 7-வது ஆட்டத்தில் லக்னோவை தோற்கடித்து ஒருவழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியது. ஆனால் அந்த உத்வேகத்தை நீடிக்க முடியாமல் கடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் இந்த போட்டியை பிரபல நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக், மகள் - அனுஷ்காவுடன் உடன் வந்து கண்டுகளித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் போட்டியை ரசித்து வருகின்றனர். இதுதொடர்பாக வீடியோவும், புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சேப்பாக் மைதானத்தில் 'தல' தோனி மற்றும் அஜித் (ஏ.கே) இருவரையும் ஒரே இடத்தில் பார்த்து, ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். THALA AJITH AT CHEPAUK TO WATCH CSK MATCH pic.twitter.com/vudJ0qkx0K
மூலக்கதை
