மாதேஸ்வரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்

  தினத்தந்தி
மாதேஸ்வரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்

கோவை,ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.'ஜெயிலர் 2' படத்தில் பகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தமிழக - கேரள எல்லையான கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பிற்காக ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றார் ரஜினி. வழியில் மாதேஸ்வரர் கோவிலை பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வந்து சாமி தரிசனம் செய்தார்.அப்போது ரஜினி வந்ததை பார்த்ததும் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்தவர்கள் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.இன்று #ஜெயிலர்_2 ஷூட்டிங் தளம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ மாதேஸ்வரர் ஆலயத்தில் #தலைவர் வழிபாடு செய்தார்... #ஓம்_நமச்சிவாய... pic.twitter.com/mdxDOBbpWoமுன்னதாக சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை