நானியின் "ஹிட் 3" 3வது பாடல் வெளியானது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது. இப்படத்தின் 2வது பாடலான 'அப்கி பார் அர்ஜுன் சர்க்கார்' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடல் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.இந்நிலையில், 'ஹிட் 3' படத்தின் தாணு என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.Listen to the intense love of Sarkaar in the magical vocals of 'Rockstar' @anirudhofficial ❤A single shot song ft. Natural Star @NameisNani ⭐#HIT3ThirdSingle #Thanu song out now!▶️ https://t.co/cAWMWN0JNPA @MickeyJMeyer Musical #HIT3 in cinemas from May 1st.… pic.twitter.com/JGjUs7DO18
மூலக்கதை
