இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் டாம் குரூஸின் "மிஷன் இம்பாசிபிள் 8"

  தினத்தந்தி
இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் 8

ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் டாம் குரூஸின் கேரக்டர்தான் ஈதன் ஹண்ட். ஈதன் ஹண்ட் இந்த கேரக்டரை ஹாலிவுட் தாண்டி உலக ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கி இருந்தார். இந்த பாகத்தில் டாம் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. சமீபத்தில் 8ம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.இப்படம் மே 23-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் ஒரு வாரம் முன்பாகவே வரும் மே 17ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.A post shared by Paramount Pictures India (@paramountpicsin)

மூலக்கதை