மதுரை - கச்சிக்குடா சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

  தினத்தந்தி
மதுரை  கச்சிக்குடா சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

மதுரை, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கச்சிக்குடாவில் இருந்து திங்கட்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07191) வருகிற 12-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து புதன்கிழமை தோறும் கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ரெயில் (வ.எண்.07192) வருகிற 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 4-ந் தேதி வரை இயக்கப்படும். அதேபோல, செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை தோறும் ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07695) வருகிற 7-ந் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் செகந்திராபாத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.07696) வருகிற 9-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படும்.

மூலக்கதை