பிரியங்கா சோப்ராவின் 'ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்' பட டிரெய்லர் வெளியீடு

  தினத்தந்தி
பிரியங்கா சோப்ராவின் ஹெட்ஸ் ஆப் ஸ்டேட் பட டிரெய்லர் வெளியீடு

சிட்னி,கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து, 2018-ம் ஆண்டு பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்ட இவர் அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ஹாலிவுட் படம் 'ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்'. இதில் இவருடன் ஜான் சீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஜூலை மாதம் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. மறுபுறம் பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் தற்காலிகமாக 'எஸ்.எஸ்.எம்.பி 29' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.Two heads are better than one. Heads of State is coming to Prime Video July 2. pic.twitter.com/Y192I5x6Ly

மூலக்கதை