சீமான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

  தினத்தந்தி
சீமான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

சென்னை,நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற திரைப்படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில், தற்போது அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'தர்மயுத்தம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.'தர்மயுத்தம்' என்ற டைட்டில், ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 1979ம் ஆண்டு வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட அதே டைட்டில் ஒரு திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக் உடன் வெளியான இந்த போஸ்டரில், சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.#SuperstarRajinikanth 's Title is #Seeman 's Battlefield Now!#DharmaYutham Title Look is Out now! @Moonpictures5 @adham_bava #planet9pictures #RKsivakumar A #R_subramanian Directorial @Seeman4TN #Rksuresh @i_anusithara @Composer_Vishal @johnmediamanagr @mediaboy_off pic.twitter.com/7QUixv7lrK

மூலக்கதை