இந்துக்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்'- மோகன் பகவத் பேச்சு

நாக்பூர்,ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:- பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளின் மதத்தை பற்றி கேட்டு அறிந்த பிறகு அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால் இந்துக்கள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த போர் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயானது.நமது இதயங்களில் வலி ஏற்பட்டுள்ளது. நாம் கோபமாக இருக்கிறோம். எனவே தீமையை அழிக்க நமது வலிமையை காட்ட வேண்டும். துயரங்களை எதிர்கொள்ளவும். தீங்கிழைக்கும் நோக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் சமூகத்திற்குள் ஒற்றுமை அவசியம். நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்க துணிய மாட்டார்கள். யாராவது அப்படி பார்த்தால், அவர்களின் கண்கள் சிதைக்கப்படும். இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு வலுவான பதிலடி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" இவ்வாறு அவர் பேசினார்.
மூலக்கதை
