போப் ஆண்டவரின் உடல் அடக்கம்: கர்நாடகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு

  தினத்தந்தி
போப் ஆண்டவரின் உடல் அடக்கம்: கர்நாடகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு

பெங்களூரு,கத்தோலிக்க திருச்சபையின் உலக தலைவர் போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தில் கடந்த 22, 23-ந் தேதிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிலையில் போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு கர்நாடகத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி இன்று அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

மூலக்கதை