பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்துசெய்த ஸ்ரேயா கோஷல்

  தினத்தந்தி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்துசெய்த ஸ்ரேயா கோஷல்

எந்த மொழியில் பாடினாலும் உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் ஷ்ரேயா கோஷலை பெரிய வெற்றி பெற வைக்கிறது. 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் மேற்பட்ட இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 23 வருடங்களாக திரைப்பட உலகில் வெற்றி நடை போடும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். தனது உருக வைக்கும் குரலால் உலகமெங்கும் பல மொழிகளில் பாடுகிறார்.தேவதாஸ் படத்தில் பாடிய பாடல்கள் இவருக்கு தேசிய விருது, பிலிம்பேர் விருது பெற்று தந்தது. இந்தியாவின் அனைத்து மொழி இசை அமைப்பாளர்களின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. தமிழில் முதல் பாடலை கார்த்திக் ராஜா இசையில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "ஆல்பம்" திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெறும் 'மாயவா... சாயவா...' பாடலை பாடிய இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.ஸ்ரேயா கோஷலின் ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி இன்று சூரத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், "சமீபத்திய துயர சம்பவங்களை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர் இணைந்து ஏப்ரல் 26ம் தேதி சூரத் நகரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழு பணமும் திரும்ப வழங்கப்படும். பணம் செலுத்திய அதே முறையில் தானாகவே திருப்பி செலுத்தப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், "ஏப்ரல் 26ம் தேதி நடைபெறவிருந்த ஸ்ரேயா கோஷலின் சூரத் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அமைதியாகவும், ஒற்றுமையுடனும் நிற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.A post shared by Tarish entertainment (@tarish_entertainment)

மூலக்கதை