திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் - ஐ.டி. ஊழியர் கைது

மும்பை,மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் காவல்துறையினரிடம் அளித்த புகார் மனுவில், பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி முதல் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். அந்த நபர் முதலில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைகாட்டியதால் அவரது பேச்சுக்கு இணங்கியதாகவும், ஆனால் அவர் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அந்த பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட ஐ.டி. ஊழியர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த நபர் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
