சென்னை-ஐதராபாத் ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 4 பேர் கைது

  தினத்தந்தி
சென்னைஐதராபாத் ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 4 பேர் கைது

சென்னை,சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மைதானத்தை சுற்றி உள்ள இடங்களில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (வயது 33), புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இம்ரான் (32), அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் (31), காரனோடையை சேர்ந்த சுரேந்தர் (23) ஆகிய 4 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 7 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை