பஹல்காம் தாக்குதல் எதிரொலி - இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

  தினத்தந்தி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி  இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

டொரான்டோ,ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை