பிரியன்ஸ், பிரப்சிம்ரன் சிங் அதிரடி... கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

  தினத்தந்தி
பிரியன்ஸ், பிரப்சிம்ரன் சிங் அதிரடி... கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடி 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மூலக்கதை