ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

கொல்கத்தா,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன்5-வது இடத்தில் இருக்கிறது.இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மூலக்கதை
