பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை முறித்து கொள்ள வேண்டும் - கங்குலி

  தினத்தந்தி
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை முறித்து கொள்ள வேண்டும்  கங்குலி

மும்பை,ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை 100 சதவீதம் முறித்து கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, 100 சதவீதம் இந்தியா இதைச் செய்ய வேண்டும் (பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்). கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது நகைச்சுவையாக மாறிவிட்டது. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை