'வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது' - ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

  தினத்தந்தி
வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது  ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

சென்னை,ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.ஐதராபாத் அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது அற்புதமானது. இன்று சில விஷயங்கள் சரியாக அமைந்தது. வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.வீரர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சியடைவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது. ஏனெனில் இன்று எங்களுக்கு தேவைப்பட்ட பார்ட்னர்ஷிப்பை எங்களால் உருவாக்க முடிந்தது. இந்த சூழ்நிலையில், நாங்கள் நிதிஷ் ரெட்டியின் இடத்தில் கிளாசெனை களமிறக்க முடிவுசெய்தோம். ஏனெனில், இங்கு எங்களின் முடிவுகள் சிறப்பாக இல்லை. அந்த திட்டம் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்றாலும், இப்போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது. இன்னும் இத்தொடரில் நாங்கள் பல சவால்களை எதிர்கொள்ள் வேண்டிவுள்ளது. இருப்பினும் இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை