நாக சைதன்யாவின் 24-வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உலக அளவில் வெளியான படம் 'தண்டேல்'. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.கார்த்திக் தண்டு இயக்க உள்ள நாக சைதன்யாவின் 24வது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிகின்றது. இந்நிலையில், புராணக்கதை தொடர்பான 'என்சி24' படத்தின் படக்குழுவின் வேலைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், "எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தைக் கடந்த, புராணக் கதை திரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது" எனக் கூறியுள்ளார். Buried SecretsBeyond TimeThe Raging Mythical Thriller Begins#NC24 Shoot begins @karthikdandu86 @BvsnP @aryasukku #NeilDcunha @AJANEESHB @NavinNooli @Srinagendra_Art @SVCCofficial @SukumarWritings @Nc24chronicles pic.twitter.com/GpPQrKASOd
மூலக்கதை
