போராடி, போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை, கேட்டாலே கிடைக்கும் - அமைச்சர் எ.வ.வேலு

  தினத்தந்தி
போராடி, போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை, கேட்டாலே கிடைக்கும்  அமைச்சர் எ.வ.வேலு

சென்னை, சட்டசபையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஷாநவாஸ் (நாகப்பட்டிணம்) பேசினார். அப்போது அவர், திராவிடர் என்பதை முதன் முதலில் உயர்த்தி பிடித்து, செயல்பட்ட அயோத்திதாசர் பண்டிதரின் உருவப்படத்தை இந்த சட்டசபையில் வைக்க வேண்டும். அதேபோல் நெல்லையில் ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்தி அதற்கு காயிதே மில்லத் பெயரை வைக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து அவர், 'அரசு பள்ளிகளை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் அவர்கள் போராடி, போராடி பெற வேண்டிய நிலை இருக்கிறது' என்றார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, 'போராடி, போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை. கேட்டாலே கிடைக்கும். இன்றைக்கு அரசு பள்ளிகளை தாண்டி மற்ற பள்ளிகளில் கூட காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

மூலக்கதை