ஐ.பி.எல்.2025: கோப்பையை வெல்லும் அணி இதுதான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.இந்த தொடரில் இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிதான் எனக்கு பிடித்த அணி. ஆனால் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என்று எனக்கு தோன்றுகிறது. இது பஞ்சாபின் ஆண்டாக இருக்கலாம்" என்று கூறினார்.
மூலக்கதை
