முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

  தினத்தந்தி
முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியாஇலங்கை இன்று மோதல்

கொழும்பு, பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இலங்கை, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு பெண்கள் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி இலங்கையில் இன்று தொடங்குகிறது. மே 11-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.இந்த போட்டி தொடரில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை