யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. இவர் தற்போது ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற மே மாதம் 16-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.A King of comedy turns master of mystery. @iYogiBabu surprises all. #JoraKaiyaThattunga releases worldwide on May 16. Save the Date! @Zakir_ali1414 #WamaEntertainment #GSaravana @FilmSaravana #VineeshMillennium @theVcreations @KalaippuliAudio #MadhuAmbat @ShantiRaoDqd… pic.twitter.com/THrsjfZR6F
மூலக்கதை
