வெப் தொடரில் நடிக்கும் நடிகை பிரியங்கா மோகன்

சென்னை,தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் 'கேங்ஸ்டர்' என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'டாக்டர்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதனை தொடர்ந்து, "கேப்டன் மில்லர், பிரதர், சூரியாவின் சனிக்கிழமை" போன்ற படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருந்தார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, நடிகை பிரியங்கா மோகன் புதிய வெப் தொடரில் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தயாரிக்க உள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஜப்பானில் நடைபெற்ற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலக்கதை
