சொத்து தகராறில் பயங்கரம்: தாய், தந்தையை டிராக்டர் ஏற்றிக்கொன்ற மகன்

  தினத்தந்தி
சொத்து தகராறில் பயங்கரம்: தாய், தந்தையை டிராக்டர் ஏற்றிக்கொன்ற மகன்

அமராவதி, ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அப்பலநாயுடு-ஜெயம்மா. இவர்களது மகன் ராஜசேகர். இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.இதற்கிடையே நேற்று மாலை பிரச்சினைக்குரிய நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார். அங்கு வந்த பெற்றோர், அதனை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், பெற்றோர் என்றும் பாராமல் அப்பலநாயுடுவையும், ஜெயம்மாவையும் டிராக்டரை ஏற்றி கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை