10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சோதிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (வயது 21). மாங்கால் கூட்ரோடு சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நட்பு காதலாக மாறியது.அதனை தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் ரவிச்சந்திரன் தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்துள்ளார். அதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். பெற்றோர் தங்கள் மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றபோது கர்ப்பமாகி இருந்தது உறுதியானது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து கேட்டபோது கர்ப்பத்துக்கு ரவிச்சந்திரன் என்பவர் காரணம் என மாணவி கூறினார்.இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
மூலக்கதை
