எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க: எண்ணிக்கை அதிகரித்தாலே நிறுத்தப்படும் சொட்டுநீர் மானியம்
நத்தம்,--திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர்.
மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை தொடர்கிறது. விவசாய வேலைகள் தெரிந்தவர்கள் 100 நாள் வேலைக்கு சென்று விடுவதால் விவசாய கூலி தொழிலாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால் விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். இதோடு தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. இதன் தீர்வாக சொட்டு நீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து 100 சதவீதம் மானியம் வழங்குகின்றன. சொட்டு நீர் பாசன மானியம் வழங்குவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. இதன் இலக்கு முடிந்ததும் திட்டமும் நிறுத்தப்படுகிறது.
இதனால் திட்டத்தில் பலன் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மானியம் பெறும் எண்ணிக்கையை அதிகரித்தால் விவசாயம் செழிக்க வழிவகுக்கும்.
விவசாயிகளுக்கு உதவலாமே
விவசாயிகள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முக்கியமானதாக இருப்பது விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையே. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். சொட்டுநீர் பாசனத்தில் மானியம் பெறும் விவசாயிகள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்த முடியும். விவசாய கூலி ஆட்கள் பிரச்னை,தண்ணீர் பற்றாக்குறையால் வேளாண் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகளுக்கு உதவ மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜ், வழக்கறிஞர், நத்தம்.
நத்தம்,--திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால்