போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரமாண்ட பேரணி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: போலீஸ் ரோந்து வாகனம் இடித்து, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று பேரணி நடத்தினர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம், அவர் மீது மோதியது. இதில், 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வாகனத்தை, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன், டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.
விபத்துக்கு பின், சியாட்டில் போலீஸ் சங்கத் தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல், இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார்.
வாஷிங்டன்: போலீஸ் ரோந்து வாகனம் இடித்து, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த