பால் பொருட்களில் கலப்படம்: தடுப்பதற்கு ஆய்வு துவக்கம்

  தினமலர்
பால் பொருட்களில் கலப்படம்: தடுப்பதற்கு ஆய்வு துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோல்கட்டா: கலப்படம் செய்வதைத் தடுக்கும் விதமாக நாடு முழுதும் பால் மற்றும் பால் பொருட்களை கண்காணிப்பு ஆய்வு செய்யும் பணியை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நேற்று துவங்கியது.

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கும் விதமாக, அவ்வப்போது பால் மற்றும் அதன் வாயிலாக தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுதும் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சோதனை நேற்று துவங்கியது.

இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆலோசகர் சத்யன் கே பாண்டா கூறியதாவது: உணவு பொருட்களில் பாலின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அதை பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடு முழுதும், 766 மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் மீது கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். வணிக நிறுவனங்கள், உணவகங்கள் என பல இடங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்.

வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, 'குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா' தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும். பால், கோவா, சென்னா, நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களில் சோதனை நடத்தப்படும்.

பாலின் தரம், பொருட்களில் சேர்க்கப்பட்ட பொருட்கள், அதன் அளவுகள், மாசுபடுத்துதல், ஆன்டிபயாடிக் எச்சங்கள் ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அடுத்த மாதம் வரை நடக்கும் கண்காணிப்பு ஆய்வின் முடிவுகள் குறித்த அறிக்கை வரும் டிசம்பரில் சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோல்கட்டா: கலப்படம் செய்வதைத் தடுக்கும் விதமாக நாடு முழுதும் பால் மற்றும் பால் பொருட்களை கண்காணிப்பு ஆய்வு செய்யும் பணியை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நேற்று

மூலக்கதை