ஓடையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தில்லை விவசாயிகள் ஏமாற்றம்

  தினமலர்
ஓடையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தில்லை விவசாயிகள் ஏமாற்றம்



சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டி அருகே வெற்றிலையூரணி பெரிய கண்மாய்க்கு செல்லும் ஓடையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் மழை பெய்தும் தண்ணீர் செல்ல முடியாதாதல் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலை ஊரணி பெரிய கண்மாயை நம்பி அப்பகுதியில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. மேலும் இப்பகுதியினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகின்றது. இந்த கண்மாய்க்கு விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி பேர் நாயக்கன்பட்டி ஓடை வழியாக தண்ணீர் வரும். ஓடை துார்வாரி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது ஓடை முழுவதுமே முட்புதற்கள், சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதனால் மழை பெய்தாலும் ஓடையில் தண்ணீர் வர வழி இல்லை. சமீபத்தில் இப்பகுதியில் பரவலாக மழை பெய்தும் ஓடை வழியாக தண்ணீர் செல்லவில்லை. மேலும் கழிவு நீரும் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. ஓடையை முழுவதுமாக துார்வாரி வெற்றிலையூரணி பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டி அருகே வெற்றிலையூரணி பெரிய கண்மாய்க்கு செல்லும் ஓடையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் மழை பெய்தும் தண்ணீர் செல்ல

மூலக்கதை