கார்த்திகையில் விரதம் துவக்கிய பக்தர்கள் கோயில்களில் சரண கோஷ முழக்கம்

  தினமலர்
கார்த்திகையில் விரதம் துவக்கிய பக்தர்கள் கோயில்களில் சரண கோஷ முழக்கம்



சிவகங்கை: சுவாமியே சரணம் ஐயப்பா... கோஷம் முழங்க கார்த்திகை முதல் தேதியான நேற்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

கார்த்திகை 1 ம் தேதியான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.

நேற்று காலை பக்தர்கள் விநாயகர், ஐயப்பன், அம்மன் கோயில்களில் குருசாமி ஆசியுடன் மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளனர். 48 நாட்கள் விரதமிருந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்வர். மகரஜோதியன்று பக்தர்கள் ஐயப்பனை தரிசித்த பின் திரும்பி வருவர்.

மாலை அணியும் பக்தர்கள் இடையிலேயேயும் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம்.

சிவகங்கை மாவட்ட அனைத்து கோயில்களில் நேற்று பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

ஒவ்வொரு குருசாமியின் கீழ் உள்ள ஐயப்ப பக்தர்கள் கோயில்களில் மண்டல பூஜை, பஜனை நடத்தி தினமும் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

சிவகங்கை: சுவாமியே சரணம் ஐயப்பா... கோஷம் முழங்க கார்த்திகை முதல் தேதியான நேற்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.கார்த்திகை 1 ம் தேதியான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சபரிமலை

மூலக்கதை