காசாவில் நிலைமையை விரைந்து சீர்படுத்தணும்: உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு

  தினமலர்
காசாவில் நிலைமையை விரைந்து சீர்படுத்தணும்: உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங்: காசாவில் தற்போதையை நிலைமையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

ஹமாஸ் - இஸ்ரேல் போர் உச்சம் தொட்டு வரும் நிலையில், பாலஸ்தீன அதிகாரிகள், இந்தோனேசியா, எகிப்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு சீனாவிற்கு சென்றிருந்தது. அங்கு இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்தக் குழுவிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியதாவது: காசாவில் தற்போது நிலவும் நிலைமையை சரி செய்ய வேண்டும். மத்திய கிழக்கில் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

காசாவின் நிலைமை உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் எப்போதும் உறுதியாக பாதுகாத்து வருகிறோம். காசாவில் நடந்துவரும் மனிதாபிமான பேரழிவு கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பீஜிங்: காசாவில் தற்போதையை நிலைமையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.ஹமாஸ் - இஸ்ரேல் போர் உச்சம் தொட்டு வரும் நிலையில், பாலஸ்தீன அதிகாரிகள்,

மூலக்கதை