விழுப்புரம் புத்தக திருவிழா 11ம் தேதியுடன் நிறைவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஏராளமானோர் அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தக திருவிழா வரும் 11ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
விழுப்புரம் நகராட்சி திடலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. 96 புத்தக அரங்குகளும், 5 அரசு துறை சார்ந்த அரங்குகளும், 'தினமலர்' நாளிதழ் சார்பில் தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கும், உள்ளூர் படைப்பாளிகள் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:30 வரை ஏராளமானோர் அரங்குகளை பார்வையிட்டும், புத்தகங்களை 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கிச் செல்கின்றனர்.
போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிய தகவல்களை வழங்கும் புத்தகங்கள், தேசத் தலைவர்கள் குறித்த வரலாற்று புத்தகங்கள் அதிகளவில் விற்கின்றன.
நேற்று காலை 11:00 மணிக்கு விந்தை விழுதுகள் நிகழ்வில் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமாரின் கருத்துரையும், அம்புஜவள்ளியின் 'கதைத்திடு; உயர்ந்திடு' விழிப்புணர்வு நிகழ்வும் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்கள் சரவணன், செல்வமேரி சந்திரிகா, ஜூலியஸ் வனத்தையன், சம்பத், துரை மலையமான் ஆகியோரின் சிறப்புரை நடந்தது. தொடர்ந்து, தணிகாசலம் கலை குழுவினரின் பம்பை, உடுக்கை, கை சிலம்பாட்டம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், சுகிசிவம் ஆகியோரின் கருத்துரை நடந்தது.
இன்று 9ம் தேதி காலை 11:00 மணிக்கு கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோரின் கருத்துரை நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்புரையும், 6:00 மணிக்கு இருளர் இன மக்களின் கலை நிகழ்ச்சியும், மாவட்ட மல்லர் கம்ப குழுவினரின் சாகச நிகழ்வும், இரவு 8:00 மணிக்கு சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், காலத்தை வென்ற கதைகள் என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் சிறப்புரையாற்றுகின்றனர். புத்தக கண்காட்சி வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஏராளமானோர் அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தக திருவிழா வரும் 11ம் தேதியுடன் நிறைவு