இறுதி யாத்திரைகளில் தொடரும் அடாவடி இது தேவையா: போக்குவரத்து விதியில் தேவை சீர்திருத்தம்
மாவட்டத்தில் வேடபட்டி, ஆர்.எம்.காலனியில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் மின்மயான கூடங்கள் உள்ளன. பொதுவாக மாவட்டம் முழுவதுமிருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், விபத்துக்கு உள்ளானவர்கள் துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் பெரும்பாலும் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்வதை தவிர்த்து ஆர்.எம்.காலனி மின்மயானத்தில் இறுதி சடங்கை முடித்து நல்லடக்கம் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு மின்மயானம் கொண்டு செல்லப்படும் இறந்தவர்களின் இறுதி பயணத்தை ஆம்புலன்சில் ஏற்றி போக்குவரத்து இடையூறின்றி கொண்டு செல்வது எளிமையான நடைமுறையாகும்.
ஆனால் சிலர் ரதம் போன்று வடிவமைக்கப்பட்ட இறுதி யாத்திரை வாகனத்தில் இறந்தவர்களின் உடலை ஏற்றி பூக்களை வாகனங்களில் நிரப்பி மெதுவாக நகர்ந்தபடி மேளதாளத்துடன் குத்தாட்டம் போட்டு போக்குவரத்திற்கு பெரும்இடையூறு செய்வது தொடர்கிறது. இதனால் ரோட்டில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் நல்ல காரியத்திற்கு செல்லும் பலரும் வாகன அணிவகுப்பில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று பின்தொடர்வது போன்ற அபசகுணம் ஏற்படுகிறது. இதனால் பலர் நல்ல காரியத்திற்கு செல்வதை தவிர்த்து மீண்டும் வீடு திரும்பும் சூழல் ஏற்படுகிறது.
இதுதவிர ரோடு முழுவதும் இறந்தவர் உடல்களில் கிடக்கும் பூக்களை அள்ளி வீசுவதால் நகரின் அழகும் அடியோடு சீர்கெட்டு வருகிறது.
இந்த பூக்களை மேயவரும் கால்நடைகள் ரோட்டை மறித்து நிற்பதால் வாகன விபத்து அபாயமும் தொடர்கிறது. அதிகமான ஒலி இறைச்சல், நகரின் துாய்மையை சீர்குலைக்கும் படியாக மலர்களாலான குப்பை , போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் என ஏராளமான பிரச்னைகளை உள்ளடக்கிய இந்த இறுதி யாத்திரையின் மெதுவான பயணத்திற்கு தடைவிதித்து ஆம்புலன்ஸில் மட்டுமே இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல வேண்டும் என சட்ட விதிமுறை இயற்ற வேண்டும்.அப்போதுதான் இது போன்ற பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
மாவட்டத்தில் வேடபட்டி, ஆர்.எம்.காலனியில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் மின்மயான கூடங்கள் உள்ளன. பொதுவாக மாவட்டம் முழுவதுமிருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள்,