மின் பிரச்னைக்கு 30 நாளில் தீர்வு: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

  தினமலர்
மின் பிரச்னைக்கு 30 நாளில் தீர்வு: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: 'மின் நுகர்வோர் அளிக்கும் புகார் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்' என்று, மின் குறைதீர் மன்றங்களுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மின் வாரியம், 44 மின் பகிர்மான வட்டங்களாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும், ஒரு மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் உள்ளது. இதன் தலைவராக, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் உள்ளார். ஒரு உறுப்பினரை ஆணையமும்; மற்றொரு உறுப்பினரை கலெக்டரும் நியமிக்கின்றனர்.

மன்றத்தில் மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம் வசூல் என, மின்சாரம் தொடர்பான அனைத்து புகாரையும் தெரிவிக்கலாம். புகார் மீது அதிகபட்சம் 50 நாட்களுக்குள் விசாரித்து, தீர்வு காணப்பட வேண்டும். இதனால், தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது, மத்திய மின் துறை பரிந்துரையின்படி, குறைதீர் மன்ற விதிகளில் மாற்றம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது. அதன் விபரம்:

குறைதீர் மன்றத்தில் அளிக்கப்படும் புகார் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். மீட்டர் பரிசோதனை அறிக்கை பெறுவது உட்பட, விசாரணைக்கு ஏதேனும் அறிக்கையை சார்ந்திருக்கும் புகார்களுக்கு மட்டும், 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படலாம்

மன்ற உறுப்பினர்கள் இருவரில் ஒருவர், கட்டாயமாக இளங்கலை பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்

குறைதீர் மன்றத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, மின் வாரிய பொறியாளர்கள் சரிவர செயல்படுத்துவதில்லை. இதற்கு, மேற்பார்வை பொறியாளர் தனக்கு கீழ் பணிபுரிவோர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதே காரணம்

இதை தவிர்க்க, எத்தனை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன; எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தஅறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை: 'மின் நுகர்வோர் அளிக்கும் புகார் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்' என்று, மின் குறைதீர் மன்றங்களுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழக மின்

மூலக்கதை