தெருவோரங்களில் பசுமையான சூழல்: இலை துளிர் அமைப்பு இளைஞர்களால் சாத்தியம்

  தினமலர்
தெருவோரங்களில் பசுமையான சூழல்: இலை துளிர் அமைப்பு இளைஞர்களால் சாத்தியம்

நகர்புறங்களில் திறந்தவெளி பகுதிகள் அனைத்தும் சிமென்ட் பூச்சுகளாகவும், தார் ரோடு என மண்தரை பார்க்க முடியாத நிலை மாறிவரும் சூழ்நிலையில் மிஞ்சிய இடங்களில் தன்னிச்சையாக வளரும் புதர் செடிகள் ஊரின் அழகையே கெடுத்து விடும்.

மனிதர்களுக்குள் ஏற்படும் கோப தாபங்கள் மன வருத்தங்களில் இருந்து விடுபட பசுமையுடன் சூழல் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

நாம் குடியிருக்கும் பகுதியிலேயே இயற்கை சூழலை கொண்டு வர வேண்டும் என ஆர்வமுள்ள சமூக அமைப்பினர் ஒவ்வொரு காலகட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவது, நட்டு வைப்பது, வேலி அமைத்து தருவது, தண்ணீர் ஊற்றி பாதுகாப்பதுடன் பராமரிப்பு பணிகளிலும் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் ராஜபாளையம் இலை துளிர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி ராஜபாளையம் ராஜுக்கள் பெரிய சாவடி முன்பு உள்ள மைதானம், தர்மராஜா தெருவில் ஒரு பகுதி, கோட்டை தலைவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சமூகப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவர்களின் தொடர் முயற்சியால் இளைஞர்கள் இணைந்து நிழல் தரும் புதிய மரக்கன்றுகளை நடுவதும், விழா காலங்களில் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து பராமரிப்பது, அவற்றின் அருகிலேயே மூலிகை செடிகளையும் வளர்த்து பாதுகாப்பது, வளர்ந்த மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து வருகின்றனர்.

அதிக ஆக்சிஜனுடன் நிழல் தரும் நாட்டு வகை இனங்களான புங்கை, வேம்பு, அரசு, வாதம், மலைவேம்பு உள்ளிட்ட மரங்களும் கருந்துளசி, நொச்சி, துாதுவளை போன்ற மூலிகை, பூ வகை செடிகள் பராமரிப்பதுடன், கண்காணிப்பு கேமரா அமைப்பது போன்ற பணிகள் மூலம் இளைஞர்கள் மேல் சமூகத்தில் நம்பிக்கை பிறக்கிறது.

சிறிய அளவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு அருகே கைவிடப்பட்ட பழமையான கிணறுகளை துார் வாரி கழிவுகளை வெளியேற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோம். அதனைத் தொடர்ந்து அரசின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினோம். தெருவின் ஒரு பக்கத்தில் பெரியோர்களால் வைக்கப்பட்ட மரங்களை பராமரித்து புதிய மரக்கன்றுகளை நட்டு அவற்றின் தண்ணீர் தேவைக்கு சொட்டுநீர் குழாய் பதித்து பசுமையை தொடர்ந்து பேணி காப்பது இளைஞர்களின் கடமையாக கருதுகிறோம்.

- ---சிவராம், செயலாளர், இலை துளிர் அமைப்பு.

மரக்கன்றுகள் இடையே பல்வேறு மூலிகை செடிகளை வாங்கி வந்து மக்களுக்கு பயன்படட்டுமே என வளர்த்தால் ஆர்வக்கோளாறில் மொத்தமாக பிய்த்து கொண்டு செல்கின்றனர். சொட்டுநீர் குழாய் பதிக்க முடியாத இடத்தில் மரக்கன்று அருகே குடியிருப்போர் பராமரிப்பில் பங்கெடுக்க எதிர்பார்க்கிறோம். அனைவருக்குமான நன்மைக்கென செய்யும் இப்பணிகளில் விழிப்புணர்வு அதிகரித்தால் எல்லோரும் பயனடைய முடியும்.

- ராமசுப்பு, உறுப்பினர்.



மரக்கன்றுகள் இடையே பல்வேறு மூலிகை செடிகளை வாங்கி வந்து மக்களுக்கு பயன்படட்டுமே என வளர்த்தால் ஆர்வக்கோளாறில் மொத்தமாக பிய்த்து கொண்டு செல்கின்றனர். சொட்டுநீர் குழாய் பதிக்க முடியாத இடத்தில் மரக்கன்று அருகே குடியிருப்போர் பராமரிப்பில் பங்கெடுக்க எதிர்பார்க்கிறோம். அனைவருக்குமான நன்மைக்கென செய்யும் இப்பணிகளில் விழிப்புணர்வு அதிகரித்தால் எல்லோரும் பயனடைய முடியும்.

- ராமசுப்பு, உறுப்பினர்.



நகர்புறங்களில் திறந்தவெளி பகுதிகள் அனைத்தும் சிமென்ட் பூச்சுகளாகவும், தார் ரோடு என மண்தரை பார்க்க முடியாத நிலை மாறிவரும் சூழ்நிலையில் மிஞ்சிய இடங்களில் தன்னிச்சையாக வளரும் புதர்

மூலக்கதை