ரஷ்ய அதிபர் தேர்தல் வெற்றி விளிம்பில் புடின்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மீண்டும் அவரே அதிபராவது உறுதியாகியுள்ளது.
ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அங்கு கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிகோலாய் கரிடோனோவ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில், நாடு முழுதும் ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைனின் கெர்சான் பகுதியிலும் ஓட்டுப்பதிவு நடந்தது. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் ரஷ்ய மக்களும் அங்குள்ள துாதரகங்களில் தங்கள் ஓட்டுகளை செலுத்தினர்.
இதையடுத்து, அன்றிரவே ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. இதில், அதிபர் விளாடிமிர் புடினே முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, ஐந்தாவது முறையாக விளாடிமிர் புடின் அதிபராக தேர்வாவது உறுதியாகியுள்ளது. புடின், மீண்டும் அதிபராக பதவியேற்றால், ரஷ்ய வரலாற்றில் கடந்த, 200 ஆண்டுகளில் நீண்ட காலம் அதிபராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுவார்.
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மீண்டும் அவரே அதிபராவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர்