ஐ.நா.,வில் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பிய பாக்.,: இந்தியா கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் விஷயங்கள் குறித்து போதுமான புரிதல் இல்லாமல் அந்நாடு உள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், ‛‛அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமைச் சட்டம் ஆகியவை குறித்து குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது: இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடானது, ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது.
எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சபையானது, ஞானம், ஆழம் மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கோரும் ஒரு விஷயத்தை உறுப்பினர்களிடம் இருந்து கோருகிறது. ஒரு வேளை அதற்கான பலம் அந்நாட்டிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.