இன்னும் அணையவில்லை குன்னுாரில் பரவிய காட்டு தீ
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் 'பாரஸ்ட் டேல்' பகுதியில் கடந்த, 12ம் தேதி, தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த வனத்திற்கு பரவியது. தீ வைத்த, நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, அடுத்த, 2 நாட்கள் கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்த பக்கெட்டில், ரேலியா அணையில் இருந்து தண்ணீரை எடுத்து சென்று கொட்டி அணைக்கும் பணி நடந்தது.
கடந்த, 3 நாட்களாக கோவை, ஆனைமலை, நீலகிரி வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், டிராக்டரில் தண்ணீர் டேங்க் இணைத்து, நீண்ட ரப்பர் குழாயின் மூலம் நீரை பாய்ச்சி தீயை அணைத்தனர்.
எனினும், தீ கட்டுக்குள் வரவில்லை. வனப்பகுதியில் சருகுகள் 1 அடி உயரத்திற்கு மேல் குவிந்து கிடந்த நிலையில் ஆங்காங்கே தீ பரவியது. தொடர்ந்து, பந்துமி, எடப்பள்ளி, கிளண்டேல் பகுதிகளில் இருந்து டிராக்டர் டேங்கரில் எடுத்து வரப்பட்ட தண்ணீரை குடங்களில் எடுத்து சென்று தீயில் ஊற்றி அணைக்கும் பணியில், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தீ பரவாமல் இருக்க இரவில் கண்காணிப்பு பணி நடக்கிறது.
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் 'பாரஸ்ட் டேல்' பகுதியில் கடந்த, 12ம் தேதி, தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த வனத்திற்கு பரவியது. தீ வைத்த, நான்கு பேரை