ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா
தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீ லீலா அந்த படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பெட்டி பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா அடி எடுத்து வைக்கிறார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது. அதே சமயம் அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து நடனமாட ஸ்ரீ லீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் தமிழ் சினிமா குறித்து பல கனவுகளை கொண்டிருக்கும் ஸ்ரீ லீலா தமிழில் தனது முதல் படம் வெறும் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடும் படமாக இருந்துவிடக் கூடாது என்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நடன திறமை கொண்ட அவர் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடும்போது அவருடைய ரீச் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றாலும் தனது எதிர்கால திரையுலக பயணத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் ஸ்ரீ லீலா. அதன் பிறகு தான் அஜித் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.