நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர்

  தினமலர்
நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர்

கடந்த ஆண்டில் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'விருபாக்ஷா'. வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கார்த்திக்கின் அடுத்த படத்தை விருபாக்ஷா படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் சுகுமார் ரைட்டிங் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர்.

இந்த நிலையில் இதில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிப்பதாகவும், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகுகிறது. 2026ம் ஆண்டில் இப்படம் வெளியாகிறது .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

மூலக்கதை