புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.

  வலைத்தமிழ்
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.

நாட்டில் உள்ள அனைத்துப் புராதனச் சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழகத் தொல்லியல் துறைகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மே 02 ம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்துப் புராதனச் சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழகத் தொல்லியல் துறைகளின் கடமை. அனைத்துப் புராதனச் சின்னங்களின் பாதுகாவலர்கள் அரசு தான்.

 

புராதனச் சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தச் செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புராதனச் சின்னங்களுக்கு அபாயகரமானவையானதல்ல என்பதை இந்தியத் தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை