விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
ஜனவரி முதல் மார்ச் வரை 2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இணையம் மோசடி, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையில் விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்
ஜனவரி முதல் மார்ச் வரை 2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடி, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரியில் 67.28 லட்சம், பிப்ரவரியில் 76.28 லட்சம், மார்ச் மாதத்தில் 79.54 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 2.23 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2023-ல் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம் ஆகும்.
வாட்ஸ்அப் நிறுவனம் கூறுகையில், “இந்திய பயனாளர்கள் அளித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தவிர, விதிகளை மீறிச் செயல்பட்ட பல்வேறு கணக்குகளை நாங்களாகவே முன்வந்து முடக்கியுள்ளோம். மத்திய அரசின்ஐடி விதியின்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் 7 கோடி இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.