நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும்- ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  தினத்தந்தி
நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை