சிக்சர் அடித்தால் அவுட்.. பழமை வாய்ந்த கிரிக்கெட் கிளப்பின் நூதன விதி

  தினத்தந்தி
சிக்சர் அடித்தால் அவுட்.. பழமை வாய்ந்த கிரிக்கெட் கிளப்பின் நூதன விதி

லண்டன், கிரிக்கெட் போட்டிகளில் காலத்திற்கேற்ப பல விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த விதிமுறைகள் பல சமயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகும். எடுத்துக்காட்டாக ஐ.பி.எல். தொடரில் உள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறையால் பல திறமையான ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்பபடுவதாக விமர்சனங்கள் உள்ளன. அதனால் நிறைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமாகும்.இதனிடையே இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான கிரிக்கெட் கிளப்பான சவுத்விக் & ஷோர்ஹாம் கிளப்பில் விளையாடும் வீரர்கள், சிக்சர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சிக்சர் அடிப்பதனால் மைதானத்திற்கு அருகே உள்ள வீடுகளின் கண்ணாடிகள் அடிக்கடி உடைவதாக குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சிக்சர் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்தடையையும் மீறி வீரர்கள் சிக்சர் விளாசினால், முதல் சிக்சர் ரன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும், 2வது சிக்சர் அவுட்டாக கருதப்படும் என்றும் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது கிளப் நிர்வாகம்.

மூலக்கதை