பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இரா. சம்பந்தனின் பூதவுடல் - நேரலை - லங்காசிறி நியூஸ்
![பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இரா. சம்பந்தனின் பூதவுடல் நேரலை லங்காசிறி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/8a2ae97c-a28c-40dd-ad6e-c943847d6f12/24-6685141b8db8f.webp)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று பகல் இலங்கை நாடாளுமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதன்படி, பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை அவரது பூதவுடல் அஞ்சலிக்காக நாடளுமன்றில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொரளையிலுள்ள தனியார் மலர் சாலையில் நேற்று மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தனின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இன்று மாலை இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.திருகோணமலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதி கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)