ஹிஜ்புல்லாவை பழிவாங்கிய இஸ்ரேல் - Israel tit for tat with hezbollah

  மாலை மலர்
ஹிஜ்புல்லாவை பழிவாங்கிய இஸ்ரேல்  Israel tit for tat with hezbollah

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். அந்த நாளில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையேயான மோதன் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒருசிலரை இஸ்ரேல் மீட்டது. எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சில தினங்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழுந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். ஹிஜ்புல்லா அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கு்ம வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் கடுமையாக தாக்கினர். ஹிஜ்புல்லா அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது.இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஜ்புல்லா ராணுவ தளபதி பௌத் சகர் (Fuad Shukr) உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. முன்னதாக கால்பந்து மைதானத்தின் மீது ஹிஜ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பௌத் சகர் தலைமை வகித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

மூலக்கதை