சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

  தினத்தந்தி
சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

மும்பை,அமெரிக்காவை சேர்ந்த ஷாட் செல்லிங் (Short Selling) நிறுவனம் ஹிண்டன்பர்க் இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் செபி அமைப்பு மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையையும் ஹிண்டன்பர்க் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. இதனிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக சற்று சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை நிறைவு செய்தது.இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 290 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பேங்க் நிப்டி 300 புள்ளிகள் சரிந்து 50 ஆயிரத்து 280 புள்ளிகளில் வர்த்தகாகி வருகிறது.சென்செக்ஸ் 180 புள்ளிகள் சரிந்து 79 ஆயிரத்து 460 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பின் நிப்டி 210 புள்ளிகள் சரிந்து 22 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகாகி வருகிறது. மிட்கேப் நிப்டி 28 புள்ளிகள் சரிந்து 12 ஆயிரத்து 625 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 280 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 375 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மூலக்கதை