இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் திடீர் மரணம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் திடீர் மரணம்  லங்காசிறி நியூஸ்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ.முகமது இல்யாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு காலமானார்.இவர் இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியிருந்தார்.இலியாஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் திகதி வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தார். மேலும் 2010, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேட்பாளராக இருந்து நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை