நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்
மும்பை, 2024ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடம் பிடித்தார்.நாட்டின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்திருக்கும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.11.6 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும். நாட்டில் ஒட்டுமொத்தமாக 334 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்கிறது இந்த பட்டியல். முகேஷ் அம்பானி 10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.